நமது நாட்டில்.. ஏன்? நமது வீட்டில் கூட நமக்கு தெரியாமல் மிகப்பெரிய சமூக பேரழிவை... நிறவெறியை தூண்டும் போக்கில் ஒரு சமூக விரோத கூட்டம் செயல்படுத்தி வருகிறது..!
"சிகப்பழகு" எனு புதுவித மன வியாதியை மக்களுக்கு இடையே ஒரு சமூக விரோத கூட்டம் வெற்றிகரமாக விதைத்து வருகிறது..!! இது வெறும் ஆரிய மாயையை மையமாக கொண்டு எழுதபடுவதாக எண்ணவேண்டாம்..!! ஆண்களும் பெண்களும் இன்று fairness கிரீம் பயன்படுத்தும் நோக்கில், கட்டாயத்தில் கொண்டு வந்து விட்டிருக்கும், சுரண்டல் கும்பல் அறிவிற்கு எட்டாத ஒரு பேரழிவை இம்மண்ணுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்..!
அரை நிமிட இடைவெளி வீதம், அரைமணி பொழுதில் அறுபது விளம்பரங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களும்.. அவர்கள் இந்த சமூகத்துக்கு செய்கின்ற மிக பெரிய தீங்கினை அறியாது அல்லது... அறிந்தும் அக்கறை இல்லாது செயல்படுகின்றனர்...! பொதுவாக இந்த வக்கிர கும்பலின் தீய எண்ணத்திற்கு பலியாவது இன்றைய இளைய சமூகமே..!!
கருப்பாக இருப்பது என்னவோ தான் செய்த குற்றம் என்பது போல்.. தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் தலைமுறையினர் பலரை கண்டிருக்கிறேன்.. வெள்ளைக்காரன் ஆண்ட போது அவனை வெளிய துரத்தி விட்டு, அவனது தோல் நிறத்துக்காக மட்டும் நம்மையும் நம் நாட்டையும் அடகு வைத்துகொள்வது எவ்விதத்தில் நியாயம்!!??
இந்தியனின் உண்மையான நிறமே கருப்பு தானே!! இன்று மட்டும் எங்கிருந்து வந்தார்கள் .. கருப்பு என்பது தன்னம்பிக்கையின் அடையாளமில்லை என்று சொல்ல??? எங்கிருந்து வாந்தார்கள்.. கருப்பு என்பது அறுவறுப்பு என்று நஞ்சை விதைக்க..!?
சிகப்பாக இருப்பது தான் அழகின் அடையாளம் என்று கூறி நிறவெறி எனும் பேரழிவை சீரிய முறையில் பிரகடன படுத்தி உள்ளனர்... ! இதற்கு சமூக சிந்தினை சற்றும் இல்லாத நடிகர் நடிகைகள்.. கோடியை வாங்கிகொண்டு கொள்ளை நோயை பரப்பிவிடுகிறார்கள்..!
சமூகத்தில் சாதியை முன்னிறுத்தி ஏற்ற தாழ்வை உண்டாகும் கயவர்கள் மத்தியில்.. நிறவெறி என்னும் கொலை வெறியில் சிக்கி சீரழியும் இன்றைய இளைஞர்களை எப்படி காப்பாற்றுவது???
No comments:
Post a Comment