இந்திய பேரரசின் பெருமை மிகு மனிதர்களாய் பெயர் கொண்டிருக்கும், திரு மன்மோகன், திருமதி மீரா குமார், பிரதீபா பாட்டில் போன்ற பொம்மை அரசியல் வாதிகளை நாடு கடத்தினால் என்ன!??? இந்தியாவின் முதல் பெண் சபா நாயகி, முதல் பெண் அதிபர் என்ற பெயர் இவர்களுக்கு எதற்கு..!? மன்மோகனை பற்றி நான் பேசவே விரும்பவில்லை..!
இன்று பாராளுமன்ற கூடத்தில் இந்தியாவின் வெளிப்பாடாக வெளியுறவு துறை அமைச்சரின் கூற்று வெட்ககேடானது..! இலங்கையுடன் வரலாறு சிறப்பு மிக்க நட்புறவு உள்ளதாம். அதனால் இலங்கையை ஆதரிக்கும் எண்ணத்தை கைவிடும் அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்!
அங்கேயுள்ள தமிழர்களை காக்க வக்கு இல்லை நமக்கு. இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த அந்த நாட்டுடன் நட்பு பாராட்ட அவசியம் என்ன!??? இதுவே ஆஸ்திரேலியாவில், சில இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட உடன் அங்கே நேரில் செய்து கூக்குரல் விட்ட எஸ். எம். கிருஷ்ணா இப்போது எங்கே சென்று விட்டார்? பிரான்ஸ் -ல் சீக்கியரின் தலை பாகையை அவிழ்க்க சொன்னதற்கு நேரில் சென்று கண்டனம் தெரிவித்த பொம்மை மனிதர் மன்மோகன், இப்போது ஒன்றரை இலட்சம் தமிழர் அழிக்கபட்டதகு கண்டனம் கூட கூறாமல் என்ன செய்கிறார்!?? இவர்களுக்கு, பாகிஸ்தான் போல ஒருநாள் இலங்கையும் தன் அவதாரத்தை காட்டும் போது தான் தெரியும்... நாம் ஏறி மிதிப்பது நம்முடைய சகோதரர்களின் உயிர் போகும் தருவாயில் உள்ள உடல்களை என்று. அப்போது வருத்தப் படாதீர்கள், அவர்களின் உயிர் போக முதன்முதல் காரணம் நீங்கள் தான் என்று!!!
பன்னிரண்டு வயது சிறுவனுக்கு இருக்கும் நெஞ்சுரம், இந்திய பேரரசின் பெரிய மனிதர்களுக்கு இல்லாததை கண்டு வெட்கப்படுகிறேன்!!
No comments:
Post a Comment