மஞ்சள் நிற தெரு விளக்கில்,
கரு நிற தார் சாலையில்...
தனியே நடந்து செல்கிறேன்..!
நிறமில்லா மழை துளி நனைத்திருக்க..
முகமில்லா காற்று வருடி செல்ல...
என் அகமெல்லாம்
உன் நினைவுகள் நிறைந்திருக்க...
உன் நினைவுகள் என் கால்களை பின் நோக்கி இழுத்து செல்ல..
பற்றி பிடித்திட உன் கைகளை தேடியே..
தனியே நடந்து செல்கிறேன்..!
உனக்கு பிடிக்கும் என்பதால்..
பலவற்றை எனக்கும் பிடித்தது..!
ஆனால் இன்று ஏன் எனக்கு மிக பிடித்த உனக்கு
என்னை அறவே பிடிக்கவில்லை!!!??
என் கால்கள் கலைத்து போனாலும்
என் மனம் இன்னும் உன்னை தேடி கொண்டே தான் இருக்கிறது..
ஆமாம்,
நான் இன்னும் தனியே தான் நடந்து செல்கிறேன்..!
உன்னோடு நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்..
உன்னோடு நான் பேச என்னும் ஒவ்வொரு வார்த்தையும்..
எனக்குள் ஆயிரம் ஆயிரம் ஒத்திகை காண்கிறது..!
எங்கெங்கோ போகும் சாலையில்
இறங்கி நடக்கின்றேன்..!
முடிந்துவிட்ட சாலையை வெறித்து பார்த்துவிட்டு..
இங்கேயே இறந்து விடுமோ நம் காதல் என்று..
கண்ணீர் சிந்தியே வழி மறந்து
நான் இன்னும் தனியே தான் நடந்து செல்கிறேன்..!!
நீ மறந்து விட்ட பல நிகழ்வுகளை
காகிதத்தில் எழுதி வைக்கவில்லை நான்!!
பாதுகாப்பாய் என் இதயத்தின்
சதைப்பகுதியில் செதுக்கி வைத்திருக்கிறேன்..!
நேரம் இருந்தால் வந்து எட்டி பார்த்துவிட்டு செல்..!
உனக்கெப்படி தெரியும்..!?
நீ என்னை எப்படி எல்லாம் நேசித்தாய் என்று..!
உன் உதடுகளை கேட்டு பார்..
என் உதட்டை வர்ணித்த கதை சொல்லும்..!
மனமிருந்தால் வந்து சேர்..!
நான் இன்னும் தனியாக தான் நடந்து செல்கிறேன்..!!
No comments:
Post a Comment